கழிவுநீர் புகாரால் எம்.எல்.ஏ., ஆய்வு
சேலம்: சேலம், தளவாய்பட்டியில் ரவுண்டானா அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் சத்யா நகர், எம்.வி.எஸ்., நகர் பகுதி சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்லவில்லை. இதுகுறித்து மக்கள் புகார்படி, பா.ம.க.,வின், சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள், நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளரிடம், கழிவுநீர் வெளியேற்றவும், சேதம் அடைந்த சாலையை சீரமைக்கவும் கேட்டுக்கொண்டார். அவர், இரு நாட்களில் செய்து தருவதாக உறுதி அளித்தார். மாவட்ட துணை செயலர்கள் கோவிந்தன், தங்கராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.