காவலாளிக்கு நீதி வேண்டும் எம்.எல்.ஏ., போராட்டம்
ஓமலுார், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், 29. இவர் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அ.தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் மாவட்டம் ஓமலுார் தொகுதி, எம்.எல்.ஏ., மணி, அவரது வீடு முன் நின்று, அஜித்குமார் போட்டோவை வைத்துக்கொண்டு, 'நீதி கிடைக்க வேண்டும்' என, நேற்று போராட்டம் நடத்தினார். தொடர்ந்து அதை, சமூக வலைதளத்தில் பதிவிட்டு, கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதேபோல் ஓமலுார் உள்ளிட்ட அ.தி.மு.க., ஒன்றிய செயலர்களும், சமூக வலைதளங்களில் பதிவிட்டு, கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.