உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மாரியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

மாரியம்மன் கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு

கெங்கவல்லி, கெங்கவல்லி பகுதியில், கோவில் உண்டியலை உடைத்து திருடிய மர்ம நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி, கணவாய்காடு பகுதியில், 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதி மக்கள், அங்குள்ள மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து வருகின்றனர். கடந்த, மே மாதம், கோவில் திருவிழா நடந்தது. இத்திருவிழாவுக்கு பின், கோவில் உண்டியல் திறக்கப்படாமல் இருந்தது.நேற்று முன்தினம், இரவு, 8:00 மணியளவில், கோவில் பூஜை முடிந்த பின், பூட்டிச் சென்றனர். நேற்று, காலை, மக்கள் பார்த்தபோது, கோவில் உண்டியல் உடைத்த நிலையில் இருந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உண்டியலில் இருந்த 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் காணிக்கையை, மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி