உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் ஐக்கியம்

100க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் ஐக்கியம்

சேலம்: ஓமலுார் ஒன்றியம் வெள்ளாளப்பட்டி, தேக்கம்பட்டி, செங்கரடு, வட்டக்காடு, அகராதிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய, 100க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் இணையும் விழா, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள, தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது. சுற்று-லாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் முன்னிலையில், 100 பேர், தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் வாழ்த்தினார். தி.மு.க.,வின், மத்திய மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், ஓமலுார் வடக்கு ஒன்றிய செயலர் பாலசுப்ரமணியன், துணை செயலர் சரவணன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாநில துணை செயலர் செல்லதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை