உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 2 குழந்தைகளுடன் தாய் மாயம்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்

சேலம், டிச. 19-சேலம், சிவதாபுரம் அருகே, பெருமாம்பட்டி வலியக்காட்டை சேர்ந்த குமார் மனைவி கோமதி, 32. இவர்களது மகள் தீபிகா, 13, மகன் கவுதம், 11. இருவரும் பெத்தாம்பட்டி அரசு பள்ளியில் படிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் குமாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதாக கூறிச்சென்ற கோமதி வீடு திரும்பவில்லை. குழந்தைகளும் வரவில்லை. இதுகுறித்து கோமதியின் தந்தை பெருமாள் புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ