கொலை வழக்கு குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டாஸ்
சேலம்:சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் கடந்த மார்ச், 30ல் ராஜேந்திரன் என்பவரை கொலை செய்த வழக்கில், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா கோழிக்கால் நத்தம் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் மகன் லோகபிரகாஷ், 21, சங்ககிரி தாலுகா கஸ்துாரிபட்டியை சேர்ந்த மாணிக்கம் மகன் சசிகுமார், 22, ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளதால், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய சேலம் எஸ்.பி., கவுதம் கோயல், கலெக்டர் பிருந்தா தேவிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, நேற்று இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதன் நகல் சேலம் மத்திய சிறையில் உள்ள லோகபிரகாஷ், சசிகுமார் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.