உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்பு குழு தர்ணா

ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்பு குழு தர்ணா

ஓய்வூதியர் அமைப்புகளின்தேசிய ஒருங்கிணைப்பு குழு தர்ணாசேலம், செப். 20-ஓய்வூதியர் அமைப்புகளின் தேசிய ஒருங்கிணைப்பு குழு, சேலம் கிளை சார்பில் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தலைமை அஞ்சலகம் முன் தர்ணா போராட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். அதில் புது ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தல்; வங்கி ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் செய்தல்; 8வது ஊதிய குழு உடனே அமைத்தல் என்பன உள்பட, 9 அம்ச கோரிக்கைகள், மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டன. இதில் குழு தலைவர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை