தேசிய சட்ட சேவை தினம் மக்களுக்கு விழிப்புணர்வு
தேசிய சட்ட சேவை தினம்மக்களுக்கு விழிப்புணர்வுமேட்டூர், நவ. 10-தேசிய சட்ட சேவைப்படி, ஆள் கடத்தலில் ஈடுபட்டோர், பிச்சைக்காரர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் வெள்ளம், பஞ்சம், நிலநடுக்கம், தொழில் அழிவு ஆகிய எதிர்பாராத நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டோர், சட்டப்பணி ஆணைக்குழுவில் மனு கொடுத்து இலவசமாக பலன் அடையலாம். இதுகுறித்து தேசிய சட்டசேவைகள் தினத்தையொட்டி நேற்று, மேட்டூர் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் வக்கீல் தியாகு, மேட்டூர், கொளத்துார், கருங்கல்லுார், கோவிந்தபாடியில் மக்களுக்கு சட்ட பணிகள் குழுவின் சேவைகளுடன் கூடிய பிரசுரம் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.