உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்சி கொடி அறிமுக நாள் தே.மு.தி.க., கொண்டாட்டம்

கட்சி கொடி அறிமுக நாள் தே.மு.தி.க., கொண்டாட்டம்

சேலம்:தே.மு.தி.க., கட்சி கொடி அறிமுகப்படுத்தி, அதன், 21ம் ஆண்டை ஒட்டி, சேலம் மாநகர் மாவட்டம் சார்பில், கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி, சிவதாபுரம், மொரப்புகாட்டில் நேற்று நடந்தது. 22வது வார்டு செயலர் குமரேசன் தலைமை வகித்தார். மாநகர மாவட்ட செயலர் ராதாகிருஷ்ணன், கட்சி கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.அதேபோல் அந்த வார்டுக்குட்பட்ட பகுதிகளில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன.அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் லட்சுமிகாந்தன், பொது குழு உறுப்பினர் நாராயணன், சேலம் ஒன்றிய செயலர் அப்பாவு, பகுதி செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி