உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பிரதான சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு வழி வேண்டும்

பிரதான சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு வழி வேண்டும்

பனமரத்துப்பட்டி:சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலை, தாசநாயக்கன்பட்டியில் மேம்பாலம் கட்டுமான பணி முடிந்து, சமீபத்தில் வாகன போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: வெளி மாவட்டங்களில் இருந்து பிரதான சாலையில் வரும் வாகனங்கள், மேம்பாலம் வழியே சேலம் செல்கின்றன. வெளியூரில் இருந்து பிரதான சாலையில் வரும் வாகனங்கள், சர்வீஸ் சாலை வழியே தாசநாயக்கன்பட்டி செல்ல, பாதை விடவில்லை.சேலத்தில் இருந்து பிரதான சாலையில் வரும் வாகனங்கள், நிலவாரப்பட்டி செல்வதற்கு பாதை விடவில்லை. இருசக்கர வாகனம் செல்லும் அளவிற்கு வழி விடப்பட்டுள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாது. பிரதான சாலையில் வரும் வாகனங்கள், பாலத்தின் மீது செல்வதை தவிர்த்து, பக்கவாட்டில் உள்ள சர்வீஸ் சாலை வழியே தாசநாயக்கன்பட்டி, நிலவாரப்பட்டி செல்வதற்கு பாதை விட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை