உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / விளக்கு இல்லை: மாணவியர் அச்சம்

விளக்கு இல்லை: மாணவியர் அச்சம்

மகுடஞ்சாவடி : இளம்பிள்ளை பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். அதேபோல் அரசு மாதிரி பள்ளியில், 100க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். ஆனால் சந்தைப்பேட்டையில் இருந்து தப்பக்குட்டை ஊராட்சி சின்ன மாரியம்மன் கோவில் வரை, 1.5 கி.மீ.,க்கு தெரு விளக்குகள் இல்லை. இதனால் சிறப்பு வகுப்பு முடிந்து, பள்ளி மாணவியர், இருளில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். குறிப்பாக, 'குடி'மகன்களால் மாணவியர் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால் பாதுகாப்பு கருதி, அப்பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை