உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / யார் பெயரும் விடுபடக்கூடாது: பா.ஜ.,வினருக்கு அறிவுரை

யார் பெயரும் விடுபடக்கூடாது: பா.ஜ.,வினருக்கு அறிவுரை

சேலம்:பா.ஜ.,வின், சேலம் வடக்கு தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிலரங்கு மாநாடு, சேலத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். அதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், சுரேஷ்குமார், கமிட்டி செயல்பாடுகள், செய்ய வேண்டிய பணி குறித்து, நிர்வாகிகளுக்கு விளக்கம் அளித்தனர்.மேலும் தற்போது நடந்து வரும் வாக்காளர் பட்-டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் முழுமை-யாக ஈடுபட்டு, ஒருவர் பெயரும் விடுபடாமல் சேர்க்க வேண்டும்; தொகுதியில் நிலவும் முக்கிய பிரச்னைகளை பட்டியலிட்டு, அவற்றை சரி-செய்யும் நடவடிக்கையில் ஈடுபட அறிவுரை வழங்கினர். நெசவாளர் பிரிவு மாநில தலைவர் அண்ணாதுரை, செவ்வாய்ப்பேட்டை மண்டல தலைவர் அருண்கணேஷ் உள்பட பலர் பங்கேற்-றனர்.அதேபோல் ஓமலுார் சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடி முக-வர்களுக்கு பயிலரங்கம், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் ஹரிராமன் தலைமையில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர்கள் சவுந்தர-ராஜன், செந்தில்வேல், சிவசாமி ஆகியோர், தேர்தல் மற்றும் எஸ்.ஐ.ஆர்., தொடர்பாக ஆலோசனை வழங்கினர். மாவட்ட பொதுச்செ-யலர் ரவி, செயலர் கிருஷணதேவராஜ், ஓமலுார், காடையாம்பட்டி மண்டல தலைவர்கள் பங்கேற்-றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ