மேலும் செய்திகள்
ஸ்டாலின் - பழனிசாமி வருகை ஓங்கப்போவது யார் 'கை?'
05-Aug-2025
சேலம்: சேலம், புது ரோட்டில் செயல்படும் தனியார் மின்னணு நிறு-வனம் மூடப்பட்டதை கண்டித்து, அதன் தொழிலாளர்கள், இரு வாரங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். அவர்களை, த.வா.க., தலைவர் வேல்முருகன் நேற்று சந்தித்து, ஆதரவை தெரிவித்தார்.தொடர்ந்து அவர் அளித்த பேட்டி: தொழிற்சாலையை தொடர்ந்து நடத்தக்கோரி, முதல்வரிடம் மனு வழங்கியுள்ளோம். ஆலையை மூட அரசு அனுமதிக்கவில்லை. 1,000 குடும்பங்களை தவிக்க விட்டு, கதவடைப்பு செய்துள்ளதை அனுமதிக்க மாட்டோம். ஆலை மூடுவதை கைவிடாவிட்டால், எங்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.தி.மு.க., கூட்டணி கட்சியினர் யாரும், கூட்டணி குறித்தோ, ஆட்சியில் பங்கு குறித்தோ பேசவில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு தான் இட ஒதுக்கீடுக்கான தீர்வு. விரைவில், மத்திய, மாநில அரசுகள், ஜாதிவாரி கணக்கெ-டுப்பு நடத்த வேண்டும். ஒன்றரை கோடி வட மாநிலத்தவர்கள், தற்போது தமிழகத்தில் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு ஓட்-டுரிமை வழங்கினால், தமிழக அரசியல் சூழல் மாறும். அதை செய்ய விடமாட்டோம். அதேநேரம் இங்கு காலம் காலமாக வாழ்ந்து வருவோரின் ஓட்டுரிமையை பறிக்கக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.பா.ம.க., மீது பழைய 'பாசம்'பா.ம.க., குறித்து, வேல்முருகனிடம் நிருபர்கள் கேட்டபோது, ''பொதுக்குழு குறித்து எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை. தந்தை, மகன் இடையே உள்ள பிரச்னையை அவர்களே பேசி தீர்த்துக்கொள்வர். நான் அங்கிருந்து வெளியே வந்து, தனி கட்சி தொடங்கி நடத்துகிறேன். பா.ம.க., என் பழைய வீடு. அந்த வீட்டை, குறை கூற மாட்டேன்,'' என்றார்.
05-Aug-2025