நவராத்திரி விழாவில் தாயாருக்கு திருமஞ்சனம்
சேலம்;நவராத்திரி விழாவையொட்டி, சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் கடந்த, 23 முதல், சுந்தரவல்லி தாயாருக்கு தினமும் மாலை சிறப்பு அலங்காரம் செய்து, ஊஞ்சலில் எழுந்தருள வைத்து, பாராயணத்துடன் பூஜை நடந்து வருகிறது. அதன்படி நேற்று காலை, சுந்தரவல்லி தாயார் உற்சவருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம் உள்பட, 16 வகை மங்கல பொருட்களால் சிறப்பு திருமஞ்சனம் செய்து, சர்வ அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டி பூஜை செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.அதேபோல் அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், சவுந்தரராஜருடன் சவுந்தரவல்லி தாயார் சேர்த்தி சேவையில், இந்திர விமானத்தில் காட்சியளித்தார். பட்டைக்கோவில் வரதராஜ பெருமாள் கோவிலில், பெருந்தேவி தாயாருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தாரமங்கலம் கண்ணனுார் மாரியம்மன் கோவிலில், நவராத்தி விழாவின், 7ம் நாளான நேற்று, உற்சவர் அம்மன், கள்ளழகர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.