மேலும் செய்திகள்
கருப்பு பேட்ஜ் அணிந்து எதிர்ப்பு
03-Oct-2024
பவானி : பவானி நகராட்சியுடன், கிராம பஞ்சாயத்துகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கிராம சபை கூட்டத்தை புறக்கணித்த ஆண்டிக்குளம் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சியுடன் அருகில் உள்ள ஆண்டிக்குளம் மற்றும் குருப்பநாய்க்கன்பாளையம் கிராம பஞ்சாயத்துகள் இணைக்கப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர். இந்நிலையில், நேற்று ஆண்டிக்குளம் பஞ்சாயத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில், நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சார்பில் மனு வழங்கப்பட்டது. தொடர்ந்து கருப்பு கொடி ஏந்தி, பவானி அருகே காடையம்பட்டியில், 30க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., சந்திரசேகரன் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்கள் கருத்து குறித்து அரசுக்கு தெரியப்படுத்துகிறோம் என கூறியதால், மறியல் கைவிடப்பட்டது.மேலும், குருப்பநாய்க்கன்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த, கிராம சபை கூட்டத்தில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் ஊர்வலமாக சென்று, நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு வழங்கினர்.
03-Oct-2024