உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெயின்டர் முகத்தை வெட்டி சிதைத்து கொலை

பெயின்டர் முகத்தை வெட்டி சிதைத்து கொலை

மேட்டூர்,சேலம் மாவட்டம் மேட்டூர், சேலம் கேம்ப், பாரதி நகரை சேர்ந்த பெயின்டர் மணிகண்டன், 27. இவரது மனைவி கவுசல்யா, 24. இவர்களுக்கு திருமணமாகி, மகள் கேசிகா, 3, உள்ளார். மணிகண்டன் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் நண்பர்களுடன் சுற்றி வந்துள்ளார். இதனால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் விரக்தி அடைந்த கவுசல்யா, மகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை, மணிகண்டன், அவரது வீட்டுக்கு செல்லும் சாலையில், முகத்தில் அரிவாளால் பல இடங்களில் வெட்டுப்பட்டு, சிதைந்த நிலையில் இறந்து கிடந்தார். சடலத்தை, கருமலைக்கூடல் போலீசார் கைப்பற்றி, மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முகத்தை கொடூரமாக வெட்டிய மர்ம நபர்கள் யார் என, போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், 'மணிகண்டனின் நண்பர், சேலம் கேம்ப்பை சேர்ந்த வினுகுமார். இவர், நேற்று முன்தினம் இரவு, மணிகண்டன் வீட்டுக்கு சென்றார். அவர் இல்லை. அவரது பாட்டி மாதேஸ்வரி இருந்தார். அவரிடம், 'உன் பேரன் மணிகண்டனை கொல்லாமல் விட மாட்டேன்' என கூறி, கத்தியை காட்டி விட்டு சென்றுள்ளார். தற்போது வினுகுமார் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை அமைத்து தேடுகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ