மேலும் செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் பாலாலய பூஜை
30-Nov-2024
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா காருவள்ளி வெங்கட்ரமணர் கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு, ஓராண்டாக திருப்பணி நடந்து வருகிறது. முதல்கட்டமாக கோவில் உட்புறம் கருங்கல் பதிக்கப்பட்டு பணி தொடங்கப்பட்டது. தற்போது கோவிலை சுற்றி தேர் செல்லும் வீதிகள், சொர்க்கவாசலுக்கு செல்லும் வழி, நுழைவாயில் புனரமைக்கப்பட்டு வருகிறது. தற்போது உபயதாரர்கள் மூலம் ராஜகோபுரத்துக்கு வண்ணம் பூசும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த பணிகள் விரைந்து முடிக்கப்படும் என, கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
30-Nov-2024