உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / துணை ராணுவத்தினர்கொடி அணிவகுப்பு

துணை ராணுவத்தினர்கொடி அணிவகுப்பு

வரும், 23ல் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. அதில் வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டுப்போட அறிவுறுத்தி, நேற்று மாலை, 4:00 மணிக்கு, மேட்டூர் டி.எஸ்.பி., சண்முக சுந்தரம், பயிற்சி ஏ.எஸ்.பி., பிரியங்கா பார்கவ் தலைமையில் துணை ராணுவத்தினர், 30 பேர், போலீசார், 30 பேர் என, 60 பேர், மரியன்னை மேல்நிலைப்பள்ளி அருகில் இருந்து நேரு நகர், வ.உ.சி., நகர், பொன்னகர், குள்ளவீரன்பட்டி வழியே பேரணியாக சென்று கொடி அணிவகுப்பு நடத்தினர். மீண்டும் பொன்னகர், அரசு மருத்துவமனை வழியே சென்று சதுரங்காடியில் நிறைவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை