அடிபட்டு இறந்து கிடந்த மயில்
தலைவாசல், தலைவாசல் அருகே வீரகனுார், தெற்குமேடு ஓடை பகுதியில், கழுத்து பகுதியில் அடிபட்ட நிலையில் ஆண் மயில் இறந்து கிடந்தது. மக்கள் தகவல்படி, வனவர் ரஷியபேகம் உள்ளிட்ட வனத்துறையினர் வந்து பார்த்தபோது, இறந்த மயிலுக்கு, 6 வயது என தெரிந்தது. மேலும் மின் கம்பி உரசி இறந்ததா, வேட்டை கும்பல் தாக்கினரா என, வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.