40 ஆண்டுக்கு பின் வரி ரசீது ஏற்காடு மக்கள் மகிழ்ச்சி
ஏற்காடு,ஏற்காடு ஊராட்சியில் உள்ள, முருகன் நகர், எம்.ஜி.ஆர்., நகர் கிராமங்களில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், 40 ஆண்டுக்கு மேலாக வசிக்கின்றனர். அவர்கள் வசிக்கும் இடம், ஒன்றிய அலுவலகத்துக்கு சொந்தமானது என்பதால், ஊராட்சி நிர்வாகம், குடிநீர், சாலை வசதி மட்டும் செய்து கொடுத்தது. பின் மின்சார வசதியும் கிடைத்தது. இதனால் அனைவருக்கும் வீட்டு வரி ரசீது வழங்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று முதல், இரு நகர்களில் வசிப்போருக்கும், குடியிருப்பு வரி விதித்து ரசீது போடும் பணியை, ஏற்காடு ஊராட்சி நிர்வாகம் தொடங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த ரசீதில், 'இந்த ரசீதை வைத்து, இந்த கட்டடம் உள்ள நிலத்துக்கு சட்டப்பூர்வ உரிமை கோர முடியாது' என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் கடன் உள்ளிட்டவை பெற முடியும் என்பதால், மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.