உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கேமரா வைக்க மக்கள் கோரிக்கை

கேமரா வைக்க மக்கள் கோரிக்கை

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து காந்தி நகரில் இருந்து பழைய சினிமா தியேட்டர், அய்யனாரப்பன் கோவில், பூ மலை கரடு வழியே, 1, 2, 3வது வார்டுகளுக்கு தார்ச்சாலை செல்கிறது. ஆனால் தெருவிளக்கு இல்லாததால், இரவில் திறந்தவெளி பார் போல் மாறிவி-டுகிறது. அந்த வழியே செல்லும் இருசக்கர வாகனங்களுக்கு கூட வழி விடாமல், 'குடி'மகன்கள் தள்ளாடுகின்றனர். இரவில் வீடு திரும்பும் பெண்கள், வழிப்பறி அச்சத்தில் செல்கின்றனர். அச்சா-லையில் தெருவிளக்கு மட்டுமின்றி, கண்காணிப்பு கேமரா பொருத்த, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை