மேலும் செய்திகள்
மெல்ல உயர துவங்கியது சோலையாறு நீர்மட்டம்
24-May-2025
மேட்டூர்:மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று நீர்-மட்டம், 111.60 அடியாக இருந்தது. அருகே உள்ள பாலம-லையில் சில நாட்களாக கனமழையால், கால்வாயில் பெருக்கெ-டுத்து சென்ற நீர், அணையில் கலந்தது.பின் மழை குறைந்ததால் கால்வாயில் செல்லும் தண்ணீர் குறைந்த நிலையில், அங்குள்ள குட்டைகளில் ஏராளமான மீன்கள் காணப்பட்டன.இதை பார்த்த சாம்பள்ளி ஊராட்சி, மாசிலாபாளையம், கோவில்பாளையம், அச்சங்காடு, மூலக்காடு கிராம மக்கள் ஏராள-மானோர் நேற்று, கால்வாயில் இறங்கி மீன்களை வலைவீசியும், கைகளாலும் பிடித்து சாக்கு மூட்டைகளில் கட்டியும், பலர் பாத்தி-ரங்களிலும் அள்ளியும் சென்றனர்.இதில், அரை கிலோ முதல், 3 கிலோ வரை திலேப்பியா உள்ளிட்ட மீன்கள் அதிகமாக சிக்கின. காலை முதல் மதியம் வரை, 2 டன்னுக்கு மேல், மக்கள் மீன்களை பிடித்து சென்றனர். இதனால் விடுமுறை நாளான நேற்று பெரும்பாலான வீடுக-ளிலும், மீன் குழம்பு, 'கமகம'த்தது.மீன்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கால்வாயில் நீர்வ-ரத்து அதிகரிக்கும்போது மழைநீர் சுத்தமாக இருக்கும் என்பதால், அணையில் வசிக்கும் மீன்கள், கால்வாய் நீருக்கு படையெ-டுக்கும். பின் கால்வாயில் நீர்வரத்து குறையும்போது, மீன்களால் மீண்டும் அணைக்கு செல்ல முடியாது. அந்த மீன்கள், கால்வாய் குட்டைகளில் தேங்கி விடும். அந்த மீன்களையே மக்கள் பிடித்-துள்ளனர்' என்றனர்.
24-May-2025