உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பெரியார் பல்கலை கல்லுாரிகளில் பருவத்தேர்வு முடிவு வெளியீடு

பெரியார் பல்கலை கல்லுாரிகளில் பருவத்தேர்வு முடிவு வெளியீடு

ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் அறிக்கை:சேலம் பெரியார் பல்கலையில் இணைவு பெற்ற கலை, அறி-வியல் கல்லுாரிகளில், இளநிலை, முதுநிலை பாடப்பிரிவு மாண-வர்களுக்கு, 2024 நவ., 6 முதல், டிச., 5 வரை பருவத்தேர்வு நடந்தது. இத்தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவு ஜன., 4ல் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றை பல்கலை இணையதளம், இணைவு பெற்ற கல்லுாரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். மறு மதிப்பீடு, மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெற, ஆன்லைன் மூலம் வரும், 23க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை