உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அரசு பணிக்கு தேர்வான பெரியார் பல்கலை மாணவிக்கு பாராட்டு

அரசு பணிக்கு தேர்வான பெரியார் பல்கலை மாணவிக்கு பாராட்டு

ஓமலுார், சேலம் பெரியார் பல்கலை கணிதத்துறையில், முதுநிலை, 2ம் ஆண்டு படிப்பவர் ஸ்ரீசண்முகப்ரியா. இவர், 2025 பிப்ரவரியில் நடந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வில், பள்ளி கல்வித்துறை உதவியாளர் பணிக்கு, மாற்றுத்திறன் சிறப்பு பிரிவில் தேர்வானார். இவர், பல்கலையின் அரசு பணி சார்ந்த போட்டித்தேர்வு மையம் மூலம் ஓராண்டாக பயிற்சி பெற்று, இப்பணிக்கு தேர்வாகியுள்ளார். இதனால் நேற்று முன்தினம் பல்கலை சார்பில், துணைவேந்தர் நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணி, கணிதத்துறை பேராசிரியர்கள், மாணவியை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி