மேலும் செய்திகள்
கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கலாம்
19-Mar-2026
சங்ககிரி:சங்ககிரி சட்டசபை தொகுதி தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, ஆலோசனை கூட்டம், சங்ககிரியில் நேற்று முன்தினம் நடந்தது. செலவின பார்வையாளர் பவன்குமார் தலைமை வகித்து பேசியதாவது:கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்கள், முழுமையாக தேர்தல் கமிஷன் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். சோத-னைச்சாவடிகளில் வாகனங்களை சோதனை செய்யும் போது முழுமையாக வீடியோ எடுக்க வேண்டும். அரசியல் கட்சிகள் சார்பில் கூட்டம் நடக்கும்போது கட்டப்பட்டுள்ள கொடிகள், தோரணங்கள், பேனர்கள், துணி பந்தல்கள், உணவு உள்ளிட்ட-வற்றையும் வீடியோ எடுத்து, வீடியோ பதிவு கண்காணிக்கும் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். தேர்தல் கமிஷன் கொடுத்-துள்ள விலை பட்டியல்களை பின்பற்றி குறிக்க வேண்டும். நேர்-மையான தேர்தல் நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். செலவினங்கள் குறித்த சந்தேகங்களுக்கு அதிகாரிகள், 95006 68431 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.தேர்தல் அலுவலர் கேந்திரியா, உதவி அலுவலர்கள் கோமதி, அருள்குமார், பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழு, கணக்கீட்டு குழு, வீடியோ பார்வை குழு, வீடியோ கண்காணிப்பு குழுவினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
19-Mar-2026