உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / முதல்வரை கண்டித்து பா.ம.க., கறுப்பு துணியுடன் ஆர்ப்பாட்டம்

முதல்வரை கண்டித்து பா.ம.க., கறுப்பு துணியுடன் ஆர்ப்பாட்டம்

ஆத்துார்: தமிழக முதல்வரை கண்டித்து, பா.ம.க.,வினர் கறுப்பு துணிக-ளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சேலம் மாவட்டம், ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் முன் நேற்று, சேலம் கிழக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் கண்டன ஆர்ப்-பாட்டம், மாவட்ட செயலர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடந்-தது. அப்போது, கறுப்பு துணியை பிடித்தபடி, 'தமிழக முதல்வர் ஸ்டாலின், பா.ம.க., நிறுவனர் ராமதாசை அவதுாறாக பேசியதால், மன்னிப்பு கேட்க வேண்டும். பா.ம.க.,வை சீண்டி பார்க்க வேண்டாம்' என, கோஷம் எழுப்பினர்.மாவட்ட நிர்வாகி பச்சமுத்து, ஆத்துார், தலைவாசல், கெங்க-வல்லி, நரசிங்கபுரம் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி