உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அடக்கம்

இறந்தவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அடக்கம்

ஆத்துார், இறந்தவரது உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால், வருவாய் துறை, போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே, சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்த தச்சு தொழிலாளி பழனிவேல், 55. இவர், நேற்று முன்தினம் உடல் நலம் பாதித்து உயிரிழந்தார். நேற்று காலை, 11:00 மணியளவில் நீரோடை பகுதியையொட்டி உள்ள நிலத்தில் உடல் அடக்கம் செய்வதற்கு, பொக்லைன் இயந்திரத்தில் பள்ளம் தோண்டுவதற்கு பழனிவேல் உறவினர்கள் சென்றனர்.அப்போது, அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் லோகநாதன், முருகேசன் ஆகியோர், உடல் அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்த ஆத்துார் ஊரக போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று, இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பழனிவேல் உறவினர்கள், 'கொரோனா காலம், அதற்கு முன்பும் இப்பகுதியில் உடல் அடக்கம் செய்து வந்துள்ளோம். தற்போது, உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்' என்றனர். லோகநாதன், 'தங்களது நிலத்தின் பகுதியில் உடல் அடக்கம் செய்யக் கூடாது' என்றார்.வருவாய்த்துறையினர், நிலம் மற்றும் உடல் அடக்கம் செய்த இடம் தொடர்பாக ஆய்வு செய்தனர். உடல் அடக்கம் செய்வதற்காக தேர்வு செய்துள்ள இடம் நீர் நிலை புறம்போக்கு என்பது தெரியவந்தது. அவ்விடத்தில், உடல் அடக்கம் செய்வதற்கு அனுமதித்தனர்.விவசாயிகளிடம், 'இங்கு எதிர்ப்பு தெரிவித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் எச்சரிக்கை செய்தனர். மதியம், 2:30 மணிக்கு மேல் பள்ளம் தோண்டப்பட்டு, உடலை அடக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை