மேலும் செய்திகள்
பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
16-Aug-2025
சேந்தமங்கலம் சேந்தமங்கலம் வட்டம், அக்கியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள குரு ராகவேந்திரா பிருந்தாவனத்தில், நேற்று காலை குருவார வழிபாடு, குருவுக்குரிய பூசம் நட்சத்திர வழிபாடு நடந்தது. மேலும் மூலவர் குரு ராகவேந்திரா மற்றும் பரிவார தெய்வங்களான லட்சுமி நரசிம்மர், விநாயகர், ராமர், சீதை மற்றும் மகாலட்சுமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு விதமான வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தன. குருவுக்கு உரிய வியாழக்கிழமை நாளும், பூசம் நட்சத்திரம் இணைந்து வருவது மிகவும் சிறப்பாகும். இந்த நாள் அட்சய திருதியை நாளை விட சிறப்பாக கருதப்படுகிறது. இந்த நாள் குரு புஷ்ப யோக நாள் என்றும் அழைக்கப்படுகின்றது. வழிபாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
16-Aug-2025