உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அஞ்சல் ஊழியர் சங்கம் போராட்டம்

அஞ்சல் ஊழியர் சங்கம் போராட்டம்

சேலம்:அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில், சேலம், கிழக்கு கோட்ட தலைமை அஞ்சலகம் முன், நேற்று போராட்டம் நடந்தது. கோட்ட தலைவர் மோகன் தலைமை வகித்தார். அதில் கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய குழு அமைத்தல்; தொழில் வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்தல்; 2018க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு சமநிலை ஊதியம் வழங்குதல்; குழு காப்பீடு தொகை, 5 லட்ச ரூபாயாக உயர்த்தல்; ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் மாத ஓய்வூதியம் வழங்குதல் என்பன உள்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். பொருளாளர் சிவசங்கரன், செயலர் ராமு உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி