பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடக்கம்
சேலம்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, வரும் மார்ச், 2 முதல், 26 வரை நடக்க உள்ளது. இத்தேர்வை, சேலம் மாவட்டத்தில், அரசு, அதன் உதவி பெறுபவை, சுயநிதி பள்ளிகள், 315ல் இருந்து, 18,025 மாணவர், 19,866 மாணவியர் என, 37,891 பேர் எழுதுகின்றனர்.இவர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. அந்தந்த பள்ளியில், வரும், 14 வரை, இத்தேர்வு நடக்கிறது. இதற்கு, வேறு பள்ளி ஆசிரியர்கள், அகத்தேர்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு பணியை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆய்வு செய்தார்.