நலிந்த இசை கலைஞர்களுக்கு வேட்டி, சேலை வழங்கல்
ஓமலுார்: ஓமலுார் ஆர்.சி.,செட்டிப்பட்டியில் செயல்படும் ஜெயக்குமார் பருவதம் இசைக்குழு சார்பில், நலிவடைந்த இசைக்குடும்பத்தினர், கணவரால் கைவிடப்பட்ட கலைஞர்களுக்கு, தீபாவளி பரிசு வழங்கும் விழா நேற்று நடந்தது. 7ம் ஆண்டாக நடந்த விழாவில், குழு தலைவர் ஜெயக்குமார், வேட்டி, சேலை, இனிப்பு ஆகியவற்றை, கலைஞர்களுக்கு வழங்கினார். இதில் நாதஸ்வர கலைஞர்கள், தப்பாட்ட கலைஞர்கள், பேண்டு வாத்திய குழுவினர் பங்கேற்றனர்.