உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தனியார் பஸ் டிரைவர் கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டம்

தனியார் பஸ் டிரைவர் கண்டக்டர்கள் ஆர்ப்பாட்டம்

ஆத்துார்: அனைத்து அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்-டத்தை கண்டித்து, சேலம் கிழக்கு மாவட்ட தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் நலச்சங்கம் சார்பில், ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள அண்ணாதுரை சிலை முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.மாவட்ட தலைவர் கலைச்செல்வன் தலைமை வகித்து பேசியதா-வது:ஏற்கனவே இலவச பயண திட்டத்தால், தனியார் பஸ்களில் வருவாய் பாதியாக குறைந்துவிட்டது. தற்போது இதை விரி-வாக்கம் செய்து, அனைத்து அரசு பஸ்களில் பெண்களுக்கு இல-வசம் என்ற அறிவிப்பால், எங்கள் வாழ்வா-தாரம் பாதிக்கப்பட்-டுள்ளது. மேலும் தனியார் பஸ் வருவாய் பாதிப்பை காரணம் காட்டி, இயக்குவதை நிறுத்தினால் பலர் வேலை இழக்கும் நிலை ஏற்படும். இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ