எஸ்.எஸ்.ஆர்.எம்., பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
சேலம், சேலம், கருப்பூர், எஸ்.எஸ்.ஆர்.எம்., மேல்நிலைப்பள்ளியில், நேற்று முன்தினம் தொடக்க விழா நடந்தது. அதில் ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களையும் வரவேற்று, இனிப்பு வழங்கினர். தொடர்ந்து நடந்த இறைவணக்க கூட்டத்தில், பள்ளி நிர்வாக தலைவர் ஆண்டியப்பன், செயலர் சண்முகம், பொருளாளர் பன்னீர்செல்வம், தலைமை ஆசிரியர் குமார் ஆகியோர், பிளஸ் ௧ வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.