உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கட்டுமான பணியின்போது மின் ஒயர் திருடியவருக்கு காப்பு

கட்டுமான பணியின்போது மின் ஒயர் திருடியவருக்கு காப்பு

கட்டுமான பணியின்போதுமின் ஒயர் திருடியவருக்கு காப்புசேலம், நவ. 12-சேலம், கோரிமேடு பொன்நகரை சேர்ந்தவர் கார்த்திக் மகன் கவுதமன், 32. இவர், தாதகாபட்டி ஸ்ரீரெங்கன் தெரு பகுதியில், நாராயணசாமி நியூலி கட்டுமான நிறுவனத்தில் சைட் இன்ஜினியராக பணிபுரிகிறார். கடந்த, 10ல் கட்டட பணி நடந்து கொண்டிருந்தபோது, வீட்டுக்கு மின் இணைப்பு செய்வதற்கு வைக்கப்பட்டிருந்த, 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐந்து கிலோ மின் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து கவுதமன் கொடுத்த புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மின் ஒயரை திருடியது தாதகாபட்டி அம்பாள் ஏரி சாலையை சேர்ந்த நட்ராஜ், 55, மூனாங்கரட்டை சேர்ந்த குணசேகர், 25, என்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் நட்ராஜை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து, ஐந்து கிலோ எடையுள்ள மின் ஒயரை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள குணசேகரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ