உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தொழிலாளியை தாக்கியவருக்கு காப்பு

தொழிலாளியை தாக்கியவருக்கு காப்பு

ஆத்துார்:ஆத்துார், அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சரவணன், 32. கட்டட தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் வேலு என்பவரது வீட்டுக்கு கட்டுமான வேலைக்கு சென்றார்.அப்போது, மந்தைவெளியை சேர்ந்த மாணிக்கம், 37, அவரது வீடு முன், 'கட்டுமான பொருட்கள் கொட்டக்கூடாது' என, தெரிவித்துள்ளார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த மாணிக்கம், இரும்பு கம்பியால் சரவணனை தாக்கியுள்ளார். காயமடைந்த சரவணன், ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆத்துார் டவுன் போலீசார், மாணிக்கத்தை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ