உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / கண்டன ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

சேலம், டிச. 22-சேலம், மெய்யனுார், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், மா.கம்யூ., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பேத்கரை அவமதித்ததாக, மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் செயலர் பிரவீன்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் சண்முகராஜா பேசினார். தொடர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.மாவட்ட குழு உறுப்பினர்கள் வெங்கடேஷ், ஜீவா, மாநகர் குழு உறுப்பினர் ராஜேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.அதேபோல் மேச்சேரியில், மா.கம்யூ., சார்பில் ஒன்றிய செயலர் மணிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் சேலம், சூரமங்கலம் தலைமை தபால் அலுவலகம் முன், வி.சி., சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் துணை செயலர் வேலுநாயக்கர் தலைமையில் கவுன்சிலர் இமயவர்மன் உள்பட பலர் பங்கேற்றனர்.சங்ககிரியில், வி.சி., நிர்வாகி சுந்தர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை