மேலும் செய்திகள்
31ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
29-Oct-2025
இலவச மனைப்பட்டா வழங்கல்
18-Oct-2025
சங்ககிரி, இலவச வீட்டு மனை வழங்க கோரி, சங்ககிரி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்ககிரி, இடைப்பாடி தாலுகாவில் உள்ள கூலித்தொழிலாளர்கள், பின்தங்கிய ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை வழங்க கோரி நடந்த, மனு அளிக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாநில தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.,வுமான சின்னதுரை தலைமை வகித்து பேசியதாவது:கூலித்தொழிலாளர்கள், பின்தங்கிய, தாழ்த்தப்பட்ட ஏழை மக்கள் வீடு மனை நிலம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். தற்போது மத்திய அரசு, பிரதமர் வீடு கட்டும் திட்டம், மாநில அரசின் சார்பில் கனவு இல்ல திட்டம் ஆகியவை சார்பில், பயனாளி களுக்கு வழங்கப்படும் தொகை விலைவாசிகளுக்கு ஏற்ப பற்றாக்குறையாக உள்ளது.வீடு கட்டுவதற்கான மூலப்பொருள்கள் விலை ஏறிக்கொண்டிருப்பதால் மத்திய, மாநில அரசுகள் ஏழைகளுக்கு வீடு கட்டுவதற்கான நிதியை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். இவ்வாறு பேசினார்.
29-Oct-2025
18-Oct-2025