பழங்குடியின பட்டியலில்மீனவரை சேர்க்க ஆர்ப்பாட்டம்
இடைப்பாடிமீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி ஆம் ஆத்மி கட்சி சார்பில், இடைப்பாடியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இடைப்பாடி சட்டசபை தொகுதி ஒருங்கிணைப்பாளர் குமரேசன் தலைமை வகித்தார். அதில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்ப வலியுறுத்தினர். சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சரத்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.