உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / குழந்தைகளுக்கு சைக்கிள் வழங்கல்

குழந்தைகளுக்கு சைக்கிள் வழங்கல்

ஆத்துார்: ஆத்துாரில், மிட்டவுன் ரோட்டரி கிளப் சார்பில் இலங்கை தமிழர் முகாம் மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று நடந்தது. மாவட்ட ஆளுனர் சிவக்குமார் தலைமை வகித்தார். அதில் இலங்கை தமிழர் முகாமில் வசிக்கும் குழந்தைகளுக்கு, 20,000 ரூபாய் மதிப்பில், 15 சைக்கிள், மாற்றுத்திறன் குழந்தைகள் இருவருக்கு தலா, 10,000 ரூபாய் மதிப்பில் நவீன சைக்கிள்கள், ஆத்துார் வள்ளலார் அறக்கட்டளைக்கு இரு மூட்டை அரிசி என, 45,000 ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆத்துார் கிளை தலைவர் கிரிதாரி, பொருளாளர் சரவணன், செயலர் மூர்த்தி, மிட்டவுன் கிளப் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ