34 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ஏற்காடு: ஏற்காடு ஒன்றிய அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து, மக்களிடம் மனுக்களை பெற்றார். தொடர்ந்து அமைச்சர் ராஜேந்திரன்பேசுகையில், ''மக்களிடம் இருந்து நேரடி-யாக மனுக்களை பெற்று குறைகளுக்கு தீர்வு காண ஏதுவாக நடக்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது கலெக்டர், தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் விரைந்து தீர்வு காணநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும்படி, கடந்த, 23ல் தொடங்கிய முகாம் மூலம், இரு நாட்களில், 4,500 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நவ., 8 வரை முகாம் நடக்கறிது. மனுக்களை கொண்டு வந்துள்ள மக்கள், கட்டாயம் கைபேசி எண்ணை குறிப்-பிட வேண்டும்,'' என்றார்.தொடர்ந்து, 34 பயனாளிகளுக்கு, 10.40 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் இந்த முகாமில், 244 மனுக்கள் பெறப்பட்டன. அதில் சில மனுக்களுக்கு உடனே தீர்வு காண, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்-தரவிட்டார். முகாமில் கலெக்டர் பிருந்தாதேவி, கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன், முன்னாள் எம்.எல்.ஏ., சிவலிங்கம், சேலம் ஆர்.டி.ஓ., அபிநயா, ஏற்காடு தாசில்தார் ரமேஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.