உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / அ.தி.மு.க., தொடக்க விழா 1,000 பேருக்கு ரெயின்கோட்

அ.தி.மு.க., தொடக்க விழா 1,000 பேருக்கு ரெயின்கோட்

சேலம், அ.தி.மு.க.,வின், 54ம் ஆண்டு தொடக்க விழா, அக்கட்சி பொதுச்செயலர், இ.பி.எஸ்., பிறந்தநாளை ஒட்டி, எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், சேலத்தில் சாலையோர வியாபாரிகள், 1,000 பேருக்கு ரெயின்கோட், இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாநில துணை செயலர் சக்திவேல் ஏற்பாட்டில் நடந்த நிகழ்ச்சியில், சேலம் மாநகர் மாவட்ட பொறுப்பாளர் சிங்காரம், கடைவீதி, முதல், இரண்டாம் அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில், திறந்தவெளியில் கடை வைத்து வியாபாரம் செய்வோருக்கு, 'ரெயின்கோட்', இனிப்பு வழங்கப்பட்டன. மாநகர் மாவட்ட செயலர் பாலு, முன்னாள் எம்.எல்.ஏ., செல்வராஜ், கவுன்சிலர் யாதவமூர்த்தி, பகுதி, வட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ