உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சமூக பணியாற்றும் ராம்கோ சிமென்ட்

சமூக பணியாற்றும் ராம்கோ சிமென்ட்

வாழப்பாடி, ஆக. 15வாழப்பாடி, சிங்கிபுரத்தில் இயங்கும் ராம்கோ சிமென்ட் நிறுவனம், வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கலையரங்கம் அமைக்கும் பணி, துக்கியாம்பாளையம் கமலாலயம் குழந்தைகள் காப்பகம், பல்வேறு கோவில்களுக்கு, சிமென்ட் மூட்டைகளை வழங்கி புனரமைக்க உதவி செய்துள்ளது. ஆண்டுதோறும் நிறுவனர் ராமசாமி ராஜா பிறந்த தினத்தையொட்டி, ரத்த தான முகாம், இலவச கண் சிகிச்சை, பொது மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறது.வாழப்பாடி மற்றும் சிங்கிபுரத்தில், தம்மம்பட்டி சாலையில் இரவில் விபத்துகளை தவிர்க்க, நவீன, எல்.இ.டி., மின் விளக்குகளை பொருத்தியுள்ளது. அண்மையில் சிங்கிபுரத்துக்கு சீரான குடிநீர் வினியோகிக்க குழாய்கள் அமைக்கும் திட்டப்பணிக்கு, பங்களிப்பை வழங்கியுள்ளது. தொடர்ந்து சமூகப்பணியாற்றும் ராம்கோ சிமென்ட் நிறுவனம் சார்பில், வாழப்பாடி மக்கள், வாடிக்கையாளர், முகவர், பணியாளர்களுக்கு, அந்த நிறுவன துணை பொது மேலாளர் சதீஷ்குமார், மேலாளர்கள், கணக்குத்துறை பிரபாகர், பணியாளர் துறை மணிவேல், அலுவலர் முனியசாமி ஆகியோர், சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ