உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 189 ஓட்டுச்சாவடி உருவாக்க பரிந்துரை

189 ஓட்டுச்சாவடி உருவாக்க பரிந்துரை

சேலம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 2026க்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம், ஓட்டுச்சாவடி சீரமைப்பு, வரைவு ஓட்டுச்சாவடி, பட்டியல் வெளியிடுதல் தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள, 11 சட்டசபை தொகுதிகளில், 3,264 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. அதில், 1,200க்கும் அதிகமான வாக்காளர்கள் கொண்ட ஓட்டுச்சாவடியை பிரித்து புது ஓட்டுச்சாவடி உருவாக்குதல், இடமாற்றுதல், கட்டட மாற்றம் செய்தல் போன்ற இனங்களை சீரமைக்க, கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, அதன் அறிக்கை வாக்காளர் பதிவு அலுவலரிடமிருந்து வரப்பெற்றுள்ளது. அதன்படி கெங்கவல்லியில், 15 ஓட்டுச்சாவடி, ஆத்துார் 22, ஏற்காடு, 18, ஓமலுார், 12, மேட்டூர், 10, இடைப்பாடி, 17, சங்ககிரி, 24, சேலம் மேற்கு, 11, வடக்கு, 24, தெற்கு, 28, வீரபாண்டி, 8 என, 189 புது ஓட்டுச்சாவடி உருவாக்க உத்தேச மாறுதல் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான ஆலோசனை, புது கருத்து ஏதும் இருப்பின் என்னிடமோ, தேர்தல் பிரிவு, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடமோ, எழுத்துப்பூர்வமாக ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும். பெறப்படும் கோரிக்கைகள், தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன், தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் நடராஜன், தேர்தல் தாசில்தார் தாமோதரன் உள்பட, அரசியல் கட்சி பிரநிதிகள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி