உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / மூதாட்டி கழுத்தை அறுத்து சங்கிலி பறித்தவருக்கு காப்பு

மூதாட்டி கழுத்தை அறுத்து சங்கிலி பறித்தவருக்கு காப்பு

சேலம், சேலம், புது பஸ் ஸ்டாண்ட் அருகே ஆலமரத்துக்காட்டை சேர்ந்தவர் சண்முகலட்சுமி, 55. இவர், அதே பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மதியம், 2:15 மணிக்கு, இவரது கடைக்கு வந்த வாலிபர், ஜவுளி எடுப்பது போல், 'பாவ்லா' காட்டி திடீரென சண்முகலட்சுமி அணிந்திருந்த, 2 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். அவர் சங்கிலியை விடாமல் கையில் பிடித்துக்கொண்டு மல்லுக்கட்டினார்.இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர், கத்தியால், அப்பெண்ணின் கழுத்தை அறுத்துவிட்டு, சங்கிலியை பறித்து தப்பினார். எனினும் கழுத்தில் ரத்தம் சிந்திய நிலையில், சண்முகலட்சுமி கூச்சல் போட்டபடி, அந்த வாலிபரை விரட்டிச்சென்றார். அப்போது அங்கிருந்த மக்கள், வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து, பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே சண்முகலட்சுமி, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், வாலிபரை ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர். அவர், திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த ராகவன், 21, என்றும், செலவுக்கு பணம் இல்லாததால், நகை பறிப்பில் ஈடுபட்டதாகவும் கூறினார். இதுதொடர்பாக வழக்குப்பதிந்து, வாலிபரை கைது செய்த போலீசார், சங்கிலியை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி