ஓய்வு அரசு ஊழியர் மரணம்
மேட்டூர், டிச. 8-மேட்டூர், தங்கமாபுரிபட்டணத்தை சேர்ந்த, ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து ஊழியர் செல்வம், 65. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:15 மணிக்கு, மேட்டூர் ஆர்.எஸ்., அருகே, ஏ.டி.எம்., மையத்துக்கு பணம் எடுக்க சென்றார். அப்போது சாலையில் மயங்கி விழுந்தார்.உறவினர்கள், மேட்டூர் அரசு மருத்துவமனை, தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் நேற்று மாலை, அவர் உயிரிழந்தார். கருமலைக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர். இறந்த செல்வத்தின் மகன் தினேஷ்குமார், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில் முதல்வராக உள்ளார்.