உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / போதையில் நண்பரை தாக்கிய ரவுடி கைது

போதையில் நண்பரை தாக்கிய ரவுடி கைது

சேலம்:சேலம், அஸ்தம்பட்டி, பாரதி நகரை பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரன், 38. ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி உள்பட, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சித்தேஸ்வரன், அவரது நண்பர்களான முஸ்தபா, அப்பு என்ற அரவிந்த் ஆகியோர் சேர்ந்து மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் சித்தேஸ்வரன், அப்பு சேர்ந்து, முஸ்தபாவை தாக்கினர். படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரித்து, நேற்று சித்தேஸ்வரனை கைது செய்து, அப்புவை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ