உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / ரவுடி சுற்றிவளைப்பு

ரவுடி சுற்றிவளைப்பு

வாழப்பாடி, சேசன்சாவடியை சேர்ந்த, கூலித்தொழிலாளி வெங்கடேஷ், 51. இவர் கடந்த, 27 இரவு, அயோத்தியாப்பட்டணம், முட்டைக்கடை பஸ் ஸ்டாப் அருகே நடந்து சென்றபோது, வெள்ளியம்பட்டியை சேர்ந்த தங்கதுரை, 52, என்பவர் கத்தியை காட்டி மிரட்டி, 'நான் ரவுடி. பாக்கெட்டில் உள்ள பணத்தை கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன்' என மிரட்டியுள்ளார். வெங்கடேஷ் கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் வந்தபோது, தங்கதுரை தப்பிவிட்டார். இதுகுறித்து வெங்கடேஷ் புகார்படி, காரிப்பட்டி போலீசார், நேற்று முன்தினம் தங்கதுரையை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை