உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலம்-சென்னை விமான நேரம் வரும் 26 முதல் மாற்றம்

சேலம்-சென்னை விமான நேரம் வரும் 26 முதல் மாற்றம்

ஓமலுார்: சேலம் விமான நிலையத்திலிருந்து, இண்டிகே விமானம் சென்னை, ஹைதராபாத், பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு பயணிகள் விமான சேவையை இயக்கி வருகிறது. வரும், 26 முதல் குளிர் கால நேர அட்டவனைபடி, விமானங்களை இயக்க உள்ளனர். அதில், ஏற்கனவே உள்ள நேரத்தின்படி, ஹைதராபாத் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு வழக்கம் போல் இயக்கப்படுகிறது. ஆனால் சேலம்-சென்னை விமான நேரம் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி மதியம், 2:40 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, 3:20 மணிக்கு சேலம் சென்றடையும். மீண்டும், 3:40 மணிக்கு புறப்பட்டு, 4:55 மணிக்கு சென்னை சென்றடையும். இத்தகவலை, இண்டிகோ விமானம் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது சேலத்திலிருந்து சென்னைக்கு மாலை, 5:00 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ