| ADDED : செப் 17, 2011 03:17 AM
சேலம்: சேலம் படைப்பாளர் பேரவை சார்பில், 'சுவைமிகு சுற்றுலாக்கள்' என்ற
தலைப்பில் நூல் வெளியீட்டு விழா, சண்முகா மருத்துவமனை கலையரங்கில் நடந்தது.
விழாவுக்கு, டாக்டர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். நடராஜன்
வரவேற்றார்.மாஜி மேலவை உறுப்பினர் ஈஸ்வரமூர்த்தி நூலை வெளியிட, அதை
பெற்றுக் கொண்ட தாரைப்புள்ளிக்காரர் அறக்கட்டளை தலைவர் தாரை.குமரவேல்,
'சுற்றுலாவின் பயனாக, நம் நாட்டினுடைய பொருள் வளத்தையும், அறிவு வளத்தையும்
பெருக செய்யும் எண்ணம் தோன்றுகிறது' என்றார். மேலும், உலகில் உள்ள
கலாச்சாரம், பண்பாடு இவற்றோடு ஒப்பிடுகையில், நம் தமிழ்நாட்டை ஒப்பிட நம்
பாரம்பரியம், பண்பாடு கலாச்சாரம் இவற்றின் பெருமையினை எண்ணி பெருமிதம்
கொள்ளவைக்கிறது என்றார். புலவர் வேலு, பூமிபாலகன், பாலகிருஷ்ணன் ஆகியோர்
நூலை ஆய்வுரை செய்தனர். கிலா.வின்சென்ட் தொகுப்புரை வழங்கினார்.
நூலாசிரியர் எழுஞாயிறு ஏற்புரை நிகழ்த்தினார்.சூரியகலா, நாகராஜன்,
பேராசிரியர் மணி, மாதையன் உள்பட இலக்கிய ஆர்வலர்கள் பலர் விழாவில் கலந்து
கொண்டனர்.