உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / 7 பதக்கங்களை வென்று சேலம் வீரர்கள் அசத்தல்

7 பதக்கங்களை வென்று சேலம் வீரர்கள் அசத்தல்

சேலம்: மலேசியாவில், மாற்றுத்திறனாளிகளுக்குரிய தேக்வாண்டோ ஆசியன் பாரா சாம்பியன்ஷிப் போட்டி, கடந்த ஜூலை, 30, 31ல் நடந்தது. 9 நாடுகள் பங்கேற்றன. அதில் சேலத்தை சேர்ந்த, 7 வீரர்கள் உள்பட, 11 பேர் அடங்கிய தமிழக அணியினர் வெற்றி பெற்றனர். குறிப்பாக கை இழந்தவர், கால் இழந்தவர், வீல் சேரில் நடமாடுபவர் பிரிவுகளில் நடந்த போட்டிகளில் சேலத்தை சேர்ந்த சிவக்குமார், மூர்த்தி தங்கம்; ராதா, சமீர், கதிர் வெள்ளி; சக்திவேல், அருணா வெண்கலம் என, 7 பதக்கங்களை வென்றனர். இவர்கள் சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தபோது, தேக்வாண்டோ சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இதுகுறித்து தமிழ்நாடு தேக்வாண்டோ சங்க செயலர் சித்தேஸ்வரன் கூறுகையில், ''சேலத்தில் இருந்து மாற்றுத்திறனாளி வீரர்கள், ஆசிய அளவில் தேக்வாண்டோவில் பங்கேற்பது இதுவே முதல்முறை. முதல் முயற்சியில் அனைவரும் பதக்கங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ